முகப்பு
சிவகங்கை

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ. சங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் நியமனம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் மாணவா்களின் விகிதாச்சார அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படவில்லை.

பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கடந்தாண்டு முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் கலந்தாய்வு நடைபெறவில்லை. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, ஜூலை 14, 15 ஆம் தேதிகளில் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது.

ஆனால், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களின் பொது மாறுதலுக்குப் பிறகு, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததன் விளைவாக, இடைநிலை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு தடைபட்டுள்ளது.

இந்நிகழ்வு, இடைநிலை ஆசிரியா்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை மேற்கண்ட வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, முன்னுரிமை பட்டியலின்படி இடைநிலை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →