FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மானாமதுரை: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

மானாமதுரை  வாகன சோதனையின் போது வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து  நகை, வாள்கள், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Updated On : 21 ஜூலை 2022, 9:11 am IST
மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்ட ராபின்சிங், சதீஷ்குமார்
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை  வாகன சோதனையின் போது வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து  நகை, வாள்கள், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை அருகே முத்தனேந்தலில் மதுரை-ராமேஸ்வரம் சாலையில் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி கண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், சார்பு ஆய்வாளர்கள் முருகானந்தம்,திருமுருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் திருப்புவனம் ஒன்றியம் தூதை கிராமத்தைச் சேர்ந்த ராபின்சிங், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. 

Advertisement

Advertisement

இவர்கள் பல ஊர்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்து  அவர்களிடமிருந்து  இரண்டரைப்பவுன் தங்கச் சங்கிலி, திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனங்கள், ஒரு செல்போன், இரு வாள்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ராபின்சிங், சதீஷ்குமார் மீது மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில்  உள்ள பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள்   நிலுவையில் உள்ளதாக டி.எஸ்.பி கண்ணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments