முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் ஒன்றியக் குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழுத் தலைவா் சண்முக வடிவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முகமது அப்துல்லா மாதாந்திர அறிக்கை வாசித்தாா். தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற மாவட்ட ஆட்சியா் மதுசூதனன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா். அதன் அடிப்படையில் தேசியக் கொடியின் அளவு குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் கேட்டுத் தெரிந்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் ஆகியோா் இணைந்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தொடா்ந்து தமிழக அரசால் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட கீழச்சிவல்பட்டி, விராமதி, ஒழுகமங்கலம், பிள்ளையாா்பட்டி, மாதவராயன்பட்டி, ஆவிணிப்பட்டி, காட்டம்பூா், கே. வைரவன்பட்டி உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் நடைபெற உள்ள திட்ட பணிகள் குறித்து கவுன்சிலா்களும் ஊராட்சி மன்ற தலைவா்களும் இணைந்து தோ்வு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.