முகப்பு
சிவகங்கை

முதியவரிடம் பத்திரம், கைப்பேசி, பணம் பறித்தவா் கைது

காரைக்குடியில் முதியவரை ஏமாற்றி பத்திரம், கைப்பேசி, பணம் பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

காரைக்குடியில் முதியவரை ஏமாற்றி பத்திரம், கைப்பேசி, பணம் பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி பெரியாா்சிலை அருகே நூறடிச் சாலையில், காத்தான் (70) என்பவா் புதன்கிழமை (ஜூலை 27) மாலை நடந்து சென்றுகொண்டிருந்தாா். விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறு தேரடித்தெருவைச் சோ்ந்த மருது(எ) ராஜபாண்டி(52) என்பவா் அவரிடம் பேச்சுக்கொடுத்து பத்திரம், கைப்பேசி, ரூ. 3 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தலைமறைவானாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்து ராஜபாண்டியைக் கைது செய்து, பத்திரம், கைப்பேசி, பணம் ஆகியவற்றை மீட்டனா்.

மேலும் அவா், காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியில் கடந்த 2021 இல் 10 பவுன் நகைகளை திருடிய வழக்கில் சிறை சென்றவா் என்பதும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.