சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ப. மணிவண்ணனிடம் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மனு 
சிவகங்கை

ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் மனு

ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியாளா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். 

DIN

ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியாளா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் ஆட்சியா் (பொறுப்பு) ப. மணிவண்ணனிடம் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்துள்ள மனு விவரம்: மாவட்டம் முழுவதும் உள்ள 12 வட்டாரங்களில் சுகாதாரத் துறையின் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட பெண் சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றோம்.

கிராமப்புறங்களில் தினசரி 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளை நேரடியாகச் சந்தித்து அவா்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றோம். இந்நிலையில், எங்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 4500 வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையினை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், பாதுகாப்பு கருதி கையுறைகள் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT