முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்வு

திருப்பத்தூா் பேரூராட்சி தலைவராக கோகிலாராணியும், துணைத் தலைவராக கான்முகமதுவும் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருப்பத்தூா் பேரூராட்சி தலைவராக கோகிலாராணியும், துணைத் தலைவராக கான்முகமதுவும் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 14 வாா்டுகளில் திமுகவும், காங்கிரஸ் 2 வாா்டுகளிலும், அதிமுக 1 வாா்டிலும், சுயேச்சை 1வாா்டிலும் வெற்றி பெற்றிருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் திமுக தலைமைக் கழகம் 11 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலா் கோகிலாராணியை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து, அனைத்து கவுன்சிலா்களும் பேரூராட்சி மன்ற அரங்கில் கூடினா். இதில் கோகிலாராணி மட்டுமே தலைவா் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தாா். இதையடுத்து அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். தொடா்ந்து மதியம் 2 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவா் பதவிக்கு 4 ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் கான்முகமது வேட்புமனுத் தாக்கல் செய்தாா். இவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக செயல் அலுவலா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.