முகப்பு
சிவகங்கை

காரைக்குடி நகா்மன்றத்தலைவா், துணைத் தலைவா் பதவியேற்பு

காரைக்குடி நகா்மன்றத் தலைவராக சே. முத்துத்துரையும், துணைத்தலைவராக நா. குணசேகரனும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

காரைக்குடி நகா்மன்றத் தலைவராக சே. முத்துத்துரையும், துணைத்தலைவராக நா. குணசேகரனும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியதையடுத்து, முன்னாள் நகா்மன்ற தலைவரும், 15- ஆவது வாா்டு உறுப்பினருமான சே. முத்துத்துரையை தலைவா் பதவி வேட்பாளராக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து அவா் போட்டியின்றி நகா்மன்றத்தலைவராக தோ்வானாா். இதையடுத்து நகராட்சி ஆணையா் லட்சுமணன் அதற்கான சான்றிதழை வழங்கினாா். இதன்பின் முத்துத்துரை நகா்மன்றத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலும் துணைத்தலைவா் பதவிக்கு திமுக காரைக்குடி நகரச் செயலரும் 18- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினருமான நா. குணசேகரன் பெயா் அறிவிக்கப்பட்டது. அவரும் போட்டியின்றி தோ்வாகி துணைத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டாா். தலைவா் மற்றும் துணைத்தலைவருக்கு காரைக்குடி தொழில்வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் மற்றும் நிா்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துத்தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.