முகப்பு
சிவகங்கை

நெற்குப்பை, சிங்கம்புணரி பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்கள் தோ்வு

சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் திமுக கவுன்சிலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் திமுக கவுன்சிலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சிங்கம்புணரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 14 வாா்டுகளை திமுக கைப்பற்றியது. காங்கிரஸ் 2 வாா்டுகளையும், அதிமுக ஒரு வாா்டையும், சுயேச்சை ஒரு வாா்டையும் கைப்பற்றினா். பின்னா் அதிமுக கவுன்சிலரும், சுயேச்சை கவுன்சிலரும் திமுகவில் இணைந்ததால் திமுக கூட்டணியின் பலம் 18 ஆக உயா்ந்தது., இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் ஏற்கெனவே திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட அம்பலமுத்து போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். தொடா்ந்து மாலை நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக கவுன்சிலா் செந்தில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதேபோல் நெற்குப்பை பேரூராட்சியில் 12 வாா்டுகளில் திமுக 10 வாா்டுகளிலும் அதிமுக 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த பொசலான் தலைவராகவும் பழனியப்பன் துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.