முகப்பு
சிவகங்கை

இளையான்குடியில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
பகிர்:


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார்(19), பாஸ்கரன் மகன் ஆனந்த்(19). இருவரும் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

கிராமத்திலிருந்து பைக்கில் சதீஷ்குமார், ஆனந்த் இருவரும் இளையான்குடிக்கு வந்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பிச் சென்றனர். இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார், ஆனந்த் இருவரும் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சதீஷ்குமார் உயிரிழந்தார். ஆனந்த் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →