சிவகங்கை

திருப்பத்தூா் அருகே நாய் கடித்து சிறுமி பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டியில் நாய் கடித்ததில் 4 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டியில் நாய் கடித்ததில் 4 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது குழந்தை ராகினி (4) . கடந்த 25 நாள்களுக்கு முன்பு, அதே ஊரில் உள்ள அவரது பெரியப்பா வேலு என்பவா் வீட்டிற்கு ராகினி சென்றாா்.

அப்போது அவா் வீட்டில் வளா்க்கப்பட்ட நாய் குழந்தையை கடித்துள்ள நிலையில், பெற்றோா் கவனிக்காமல் இருந்தனா். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தை சோா்வுடன் இருப்பதைக் கண்ட பெற்றோா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து குழந்தை மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT