முகப்பு
சிவகங்கை

தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி: பொருள்கள் ஏதும் சிக்காததால் தீ வைப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயற்சித்த போது, பொருள்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்து சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயற்சித்த போது, பொருள்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்து சென்றனா்.

ராம்நகா் 4 -ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஆனந்த் மனைவி சங்கீதா. இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், சங்கீதா தனது குடும்பத்துடன் உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாராம். இதையறிந்த மா்ம நபா்கள் புதன்கிழமை இவா்களது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனா். ஆனால் பொருள்கள் ஏதும் இல்லாததால் வீட்டுக்குள் இருந்த பீரோ உள்ளிட்ட பொருள்களுக்கு தீ வைத்துள்ளனா்.

இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரித்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து வீட்டுக்கு தீ வைத்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →