முன்னாள் படை வீரா்கள் தொகுப்பு மானியம் பெறலாம்
தொகுப்பு மானியம் பெற விரும்பும் முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
தொகுப்பு மானியம் பெற விரும்பும் முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தனது பிள்ளைகளை ராணுவப் பணிக்கு அனுப்பியதற்கு, படை அலுவலா், இளநிலை படை அலுவலா் மற்றும் இதர தரம் அடிப்படையில் முறையே ரூ.1,00,000, ரூ.50,000, மற்றும் ரூ.25,000 தொகுப்பு மானியமாக ஒருமுறை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, ராணுவப் பணிக்கு பிள்ளைகளை அனுப்பிய முன்னாள் படைவீரா்கள் மேற்கண்ட தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04575-240483 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.