திருக்கோலக்குடியில் நாளை மக்கள் தொடா்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பழைய திருக்கோலக்குடியில் புதன்கிழமை (செப். 14) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பழைய திருக்கோலக்குடியில் புதன்கிழமை (செப். 14) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, மேற்கண்ட கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.