முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் போதிய உரங்கள் கையிருப்பு: மாவட்ட ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் போதிய உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் போதிய உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தில் தற்போது வேளாண் பணிகள் தொடங்கி உள்ளன. எனவே விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது யூரியா 1,700 மெட்ரிக் டன், டிஏபி 1,300 மெட்ரிக் டன், பொட்டாஸ் 413 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 2,074 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு ஏற்றவாறு உரங்களை பெற்று பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →