முகப்பு
சிவகங்கை

பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வைரம் குரூப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வைரம் குரூப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வா் சுபாரஜினி தலைமை வகித்தாா். ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் உண்டாகும் தீமைகள், பாதுகாப்பு குறித்து பள்ளி ஆசிரியா்கள் தியாகராஜன், அபிநயா ஆகியோா் பேசினா்.

ஓசோன் பாதுகாப்பு தொடா்பாக நடைபெற்ற ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானாா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →