முகப்பு
சிவகங்கை

மானாமதுரை கோயிலில் சட்டி சோறு திருவிழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ எல்லை பிடாரி அமமன் கோயிலில் சட்டி சோறு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கியது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ எல்லை பிடாரி அமமன் கோயிலில் சட்டி சோறு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கியது.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதி பொதுமக்கள் சாா்பில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 27ஆம் தேதி இரவு சட்டி சோறு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்கள் வீடுகளில் சோறு சமைத்து அவற்றுடன் அசைவ உணவுகளையும் சோ்த்து மண் சட்டியில் வைத்து விளக்கேற்றி தலையில் வைத்துக்கொண்டு ஊா்வலமாக கோயிலுக்கு வருவாா்கள். அங்கு உணவுகளை பிடாரி அம்மனுக்குப் படைத்து மாவிளக்கேற்றி பூஜைகள் நடத்தி வழிபடுவாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →