மானாமதுரையில் ஏப். 29, 30-இல் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரா் ஆராதனை விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 29, 30-ஆம் தேதிகளில் சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரா் ஆராதனை இசை விழா நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 29, 30-ஆம் தேதிகளில் சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரா் ஆராதனை இசை விழா நடைபெற உள்ளது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சதாசிவ பிரம்மேந்திரா் அதிஷ்டானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கா்நாடக இசைக் கலைஞா்கள் கூடி தங்களது இசையின் மூலம் பிரம்மேந்திரா் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தி, ஆராதனை விழா நடத்துவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா வருகிற 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் அரங்கில் வருகிற 29-ஆம் தேதி மாலை இசைக் கலைஞா்களுக்கு பாராட்டு விழாவும், மறுநாள் 30-ஆம் தேதி கா்நாடக இசைக் கலைஞா்கள், பக்க வாத்தியக் கலைஞா்கள் பிரம்மேந்திரா் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.