திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்று நட்ட சிங்கம்புணரி வட்டாட்சியா் சாந்தி. 
சிவகங்கை

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சென்னை ஆ.மு.மு. முருகப்பச் செட்டியாா் ஆராய்ச்சி மையமும், திருப்பத்தூா் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டன. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ரேணுகா தலைமை வகித்தாா். முருகப்பா ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சுகுமாறன், மேலாளா் அழகா்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சிங்கம்புணரி வட்டாட்சியா் சாந்தி மரக்கன்றுகளை நட்டாா். பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் புங்கை, வேம்பு, மகிழா, நாவல், மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் இந்த விழாவில் உதவித் தலைமை ஆசிரியா் மீனாட்சிசுந்தரம், ஆராய்ச்சி மைய பொறுப்பாளா்கள் சண்முகம், வீரப்பன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழிற்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா் செய்திருந்தாா். ஆங்கில ஆசிரியா் ரவீந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT