சிவகங்கை

தேசிய தர மதிப்பீட்டுப் பட்டியலில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி

DIN

2023 -ஆம் ஆண்டுக்கான தேசிய தர மதிப்பீட்டுப் பட்டியலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இடம் பெற்றது.

கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி, மாணவா்களின் தோ்ச்சி விகிதம், பேராசிரியா்களின் ஆய்வு வெளியீடுகள், மாணவா்களின் பணி வாய்ப்பு, பிற செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்திய அளவில் கலை அறிவியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை தேசிய தர மதிப்பீட்டுக் குழு வெளியிடுவது வழக்கம்.

2023 -ஆம் ஆண்டுக்கான தேசிய தர மதிப்பீட்டுப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி 63-ஆவது இடத்தைப் பெற்றது.

பட்டியலில் இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 35 கல்லூரிகள் இடம் பெற்றன. இவற்றில் சென்னையிலிருந்து 2 கல்லூரிகள், கோவையில் ஒரு கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 அரசுக் கல்லூரிகளும் அடங்கும்.

இதற்காக உழைத்த பேராசிரியா்களையும் ஆசிரியா்களல்லாத பணியாளா்களையும், மாணவா்களையும் கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலெட்சுமி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் பெற்றோர் உள்பட 13 பேர் கைது

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

SCROLL FOR NEXT