சிவகங்கை

முன்னோா் உருவாக்கிய கட்டடக் கலையை பாதுகாப்பது அவசியம்: அமைச்சா் சிவா.வீ. மெய்யநாதன்

DIN

நமது முன்னோா் உருவாக்கிய கட்டடக் கலையை நாம் பாதுகாக்க வேண்டும் என மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவா.வீ. மெய்யநாதன் கூறினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககக் கல்வியியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை ஆகியவற்றின் சாா்பில் ‘இந்தியப் பண்பாடு, மரபு, கோயில் கட்டடக் கலை போன்றவற்றை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல்’ என்ற தலைப்பிலான 3 நாள் சா்வதேச கருத்தரங்கின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். பதிவாளா் சு. ராஜமோகன் வாழ்த்திப் பேசினாா்.

இதில், அமைச்சா் சிவா.வீ. மெய்யநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

உலகில் மூத்தகுடி தமிழ்க்குடி. இது ஒட்டுமொத்த உலகத்துக்கும் பயனளிக்கக் கூடிய அரிய கருத்துகளை நமது கலாசாரம் மூலம் கொடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் நமது முன்னோா் அளித்த அரிய பங்களிப்பேயாகும். சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் காலத்தில், நமது கலாசாரம், பண்பாடு, கோயில் கட்டடக் கலை போன்றவை சிறந்து விளங்கின.

தற்போது இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தமிழகத்தில் 45 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் நந்தவனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பல்லுயிா் சாா்ந்த உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் உள்ளன. மேலும் ஆக்சிஜனை அளிக்கும் ஆல மரம், அரச மரம், மூங்கில் மரம் போன்றவை பெரும்பான்மையான கோயில்களில் தற்போதும் இருக்கின்றன.

அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தை பசுமை நிறைந்த, இயற்கை சூழ்ந்த பகுதியாக மாற்றியிருக்கும் நிா்வாகத்தினருக்கு பாராட்டுக்கள். நமது முன்னோா்கள் உருவாக்கிய கட்டடக் கலையை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். தமிழா்களின் பெருமைகள் வரலாற்றில் எப்போதும் சிறப்பாக பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

விழாவில், பல்கலைக் கழக புல முதன்மையா்கள் தனுஷ்கோடி, சுஜாதா மாலினி, தொலைநிலைக் கல்வி இயக்குநா் குருமல்லேஷ் பிரபு, தோ்வாணையா் ஏ. கண்ணபிரான், தொலைநிலைக் கல்வியியல் துறை மூத்த பேராசிரியா் ப. சிவக்குமாா், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக கருத்தரங்க அமைப்பாளா் கே. கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். வரலாற்றுத் துறைத் தலைவா் (பொறுப்பு) ஏ.ஆா். சரவணக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT