மின்னல் தாக்கிதொழிலாளி பலி
மானாமதுரை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சித்தலக்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் தொழிலாளி அழகு (47). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்திலுள்ள வயல்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்னல் தாக்கியதில் காயமடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.