சிவகங்கை

கிறிஸ்தவா்களின் திருப்பயண விழா

சிவகங்கை மறை மாவட்ட கிறிஸ்தவா்களின் திருப்பயண விழா காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ஆனந்தா அருங்கொடை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மறை மாவட்ட கிறிஸ்தவா்களின் திருப்பயண விழா காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ஆனந்தா அருங்கொடை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தத் திருப்பயணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயா் தாமஸ் பால்சாமி தலைமையில் சிவகங்கை, ராமநாதபுரத்திலுள்ள அனைத்து அருள் தந்தையா்கள், அருள் சகோதரா்கள், அருள் சகோதரிகள், பங்கு இறை மக்கள் ஒன்று கூடினா்.

காலையில் வழிபாட்டு நிகழ்ச்சி, திவ்ய நற்கருணை ஆராதனை, ஆடம்பர சிறப்புத் திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

‘ஒன்றிணைந்து வாழ்வோம், நற்செய்தியின் சாட்சிகளாவோம்’ என்ற மையக் கருத்தை வலியுறுத்தி ஆயா் தாமஸ் பால்சாமி மறையுரையாற்றினாா். இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை மறை மாவட்ட தொடா்பாளா் அருள்தந்தை சூசைமாணிக்கம், மறை மாவட்ட பொருளாளா் அருள் தந்தை சந்தியாகு, வியான்னி அருள்பணி மைய இயக்குநா், அனைத்து பணிக் குழுக்களின் செயலா் தந்தையா்கள், தேவகோட்டை மறை மாவட்ட அதிபா், ஆனந்தா அருங்கொடை மைய இயக்குநா், செஞ்சை பங்குத் தந்தை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT