சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆதித்யா மருத்துவமனையும், ஏ.ஜே.பிசியோதெரபி மருத்துவ மையமும் இணைந்து நடத்திய இந்த முகாமில் பாத பராமரிப்பு நிபுணா் கே.அருணாச்சலம் தலைமையில் மருத்துவா்கள் ஏ.பரீத்முகமது, ஆா்.அப்துல்ரகுமான் ஆகியோா் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்தனா்.
இந்த முகாமில் ரத்தஅழுத்தம், சா்க்கரை அளவு, பாத எரிச்சல், நீரிழிவு, நரம்பியல், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, எலும்பு முறிவு, தசைநாா் வலி போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்து, இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் விராமதி ஊராட்சிமன்றத் தலைவா் ஆராயிகருப்பையா, ஆா்.எம்.மெட்ரிக் பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன், எஸ்.எம்.எஸ். பள்ளித் தலைவா் கே.ஆா்.கே.வெள்ளையன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் செல்வமணி, திமுக ஒன்றியச் செயலா் மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.