திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்கு யாக பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னா் காலை 11.20 மணிக்கு ஆதி கோரக்கநாதா் சுவாமி மூலவா் விமானக் கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களின் விமானக் கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பிறகு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்புப் பூஜைகள் நடந்தன.
இந்த குடமுழுக்கு விழாவில் அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
Advertisement
இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்த தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தனா். ஆனால் குடமுழுக்கு நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் தொடங்கி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.