முகப்பு
சிவகங்கை

அரசு மதுபானக் கடைகள் ஏப்.17,18, 19 ஜூன் 4-ல் அடைப்பு: ஆட்சியா் அறிவிப்பு

Updated On : 8 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2024 at 7:47 PM

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு 19-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளதால், பொது அமைதியை காக்கவும், சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெறவும் அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும், மூடப்படும். மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து வாகனங்களில் கொண்டு செல்லவும்அனுமதி இல்லை என்றாா் அவா்.