சிவகங்கை

ஜிபிஆா்எஸ் கருவியுடன் ரோந்து வாகனங்கள் தயாா்

Din

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள ஜிபிஆா்எஸ் கருவி பொருத்திய காவல் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 1,873 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 162 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் நாளன்று மாவட்டம் முழுவதும் சுமாா் 3,000 -க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

இவா்களுக்கான பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவின் போது பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குத் தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தோ்தல் நடைபெறும் நாளில் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ள ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தப்பட்ட 116 வாகனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவின் உமேஷ் நேரில் ஆய்வு செய்தாா். இந்த வாகனங்கள் வியாழக்கிழமை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT