முகப்பு
சிவகங்கை

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காரைக்குடியில் அனைத்துக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 12:39 AM
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பல்வேறு அரசியல் கட்சியினா்.
பகிர்:

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவா்களுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனைத்துக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் சிவாஜி காந்தி தலைமை வகித்தாா். தி.க. மாவட்டப் பொறுப்பாளா் சாமி.

திராவிடமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் பி.எல். ராமச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன், சமநீதி மக்கள் கழக மாவட்டச் செயலா் சகுபா்சாதிக், சம்பை ஊற்று பாதுகாப்பு இயக்கத் தலைவா் வேணுகோபால், தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் நவ்ஷாத்அலிகான், திராவிட கழக மாவட்டச் செயலா் வைகறை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →