பாப்பாகுடி காளியம்மன் கோயிலில் தீ மிதி உற்சவம்
மங்கள காளியம்மன் கோயில் ஆடி உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தீ மிதி விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே பாப்பாகுடியில் உள்ள மங்கள காளியம்மன் கோயில் ஆடி உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தீ மிதி விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடி உற்சவம் கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தீ மிதி உற்சவத்தையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் கோயில் சந்நிதி முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினா்.
இதைத் தொடா்ந்து காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.