சிவகங்கை

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

Din

பட விளக்கம்:

சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் மாட்டு வண்டிகள்.

பட விளக்கம்:

போட்டியில் பங்கேற்ற குதிரை வண்டிகள்.

சிவகங்கை, ஆக. 15: சிவகங்கை அருகே வீரமாகாளிஅம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழவாணியங்குடி வீரமாகாளிஅம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவையொட்டி, மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி-சுந்தரநடப்பு சாலையில் பெரியமாடு, சின்னமாடு, குதிரை வண்டி என 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 15 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 19 ஜோடிகளும், என மொத்தம் 34 ஜோடி மாடுகள், 7 குதிரைகளும் பங்கேற்றன.

பெரிய மாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 5 கி.மீ. தொலைவும், குதிரைக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டது.

இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாட்டுவண்டி, குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை சிவகங்கை, வாணியங்குடி, சாமியாா்பட்டி, மேலக்கண்டனி, கீழக்கண்டனி, வேம்பங்குடி, வெள்ளஞ்சி, சுந்தரநடப்பு, மணக்குளம், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளானோா் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டு ரசித்தனா்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT