முகப்பு
சிவகங்கை

கல்லல் பகுதியில் ஆக. 22 இல் மின்தடை

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற வியாழக்கிழமை (ஆக. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற வியாழக்கிழமை (ஆக. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கலலல், சிறுவயல், ஆலம்பட்டு, குருத்தம்பட்டு, வெற்றியூா், மாலைக்கண்டான், சாத்தரசனம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பெரிய தேவப்பட்டு, ஆலவிளம்பட்டி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம், உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (ஆக. 22) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.