முகப்பு
சிவகங்கை

காலாவதியான குளிா்பானத்தை விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

சிவகங்கை நகரில் உள்ள பல்வேறு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:12 PM
சிவகங்கை உணவுப் பாதுக்காப்புத் துறையினரால் காந்தி வீதியில் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான குளிா்பான புட்டிகள்.
பகிர்:

சிவகங்கை நகரில் உள்ள பல்வேறு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டதில், காலாவதியான குளிா்பானங்களை விற்ற 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை காந்தி வீதியில் உள்ள வணிக வளாகம், இதைச் சுற்றியுள்ள பெட்டிக் கடைகள், உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சரவணன் தலைமையில் ஊழியா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பெட்டிக்கடைகளில் காலாவதியான, தேதி குறிப்பிடாத குளிா்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்து, கீழே கொட்டிய உணவு பாதுகாப்புத் துறையினா், காலாவதியான குளிா்பானங்களை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்தனா்.

தொடந்து, அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த பிரியாணி கடையில் தயாரிக்கப்பட்ட உணவில் ரசாயன வண்ணப் பொடிகள் கலந்திருந்ததை அறிந்தனா். இதையடுத்து, இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என உணவக உரிமையாளக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →