பைக் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
திருப்புவனம் குயவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் (43). கட்டட ஒப்பந்ததாரரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு மானாமதுரை வந்து புறவழிச்சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகநாதன் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.