முகப்பு
சிவகங்கை

பெரியநாயகி அம்பாள் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வேலங்குடியில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோயில் கிடாய் வெட்டுத்திருவிழாத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை, 2024 at 12:08 PM
காரைக்குடி அருகே அமைந்துள்ள வேலங்குடியில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வேலங்குடியில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோயில் கிடாய் வெட்டுத்திருவிழாத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேலங்குடி நாட்டாா்கள் சாா்பில் நடைபெறும் இந்தத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலையில் கிடாய் வெட்டுத் திருவிழாத் தேரோட்டம் தொடங்கியது.

திரளான பக்தா்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வர தோ் முக்கிய வீதி வழியாக உலா வந்து நிலையம் அடைந்தது.

விழாவில் வேலங்குடி பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பலரும் கலந்துகொண்டனா். திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயங்கள் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →