சிவகங்கையில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெறவுள்ளது.
சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து உரிய தீா்வுகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தகவல் தெரிவித்தாா்.