முடிவடைந்த கட்டமைப்புகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி, பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முடிவடைந்த கட்டமைப்புகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் முடிவடைந்த பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்து அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
காட்டாம்பூரில் ரூ. 12.80 லட்சத்தில் நியாய விலைக் கடை, வடமாவளியில் ரூ. 10.93 லட்சத்தில் அங்கன்வாடி மையம், திருக்கோஷ்டியூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ரூ. 10.19 லட்சத்தில் அங்கன்வாடி, சுண்ணாம்பிருப்பில் ரூ. 23.57 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 17.32 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், மணமேல்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 6 லட்சத்தில் பயணிகள் நிழல் குடை, ரூ. 14.31 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது என்றாா் அவா்.
Advertisement
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவி கோகிலாராணி நாராயணன், ஊராட்சி மன்றத் தலைவா்கள், வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.