அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.09 கோடி டாலராக அதிகரிப்பு!: ரிசர்வ் வங்கி
அந்நியச் செலாவணி கையிருப்பு 906.30 கோடி டாலர் அதிகரித்து 69,712.09 கோடி டாலராக புதிய உச்சம்.
மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 03ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 906.30 கோடி டாலர் அதிகரித்து, 69712.09 கோடி டாலராக புதிய உச்சத்தை எட்டியதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.
மார்ச் 27-இல் முடிவடைந்த முந்தைய வாரத்தில், மொத்த கையிருப்பு 1,028.8 கோடி டாலர் குறைந்து 68,805.8 கோடி டாலராக இருந்தது.
மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக 72,849.40 கோடி டாலராக இருந்தது. அதன் பிறகு ஏற்பட்ட நெருக்கடியால், கையிருப்பு குறைந்தது.
Advertisement
Advertisement
ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 178.4 கோடி டாலர் அதிகரித்து, 55,285.6 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 722.1 கோடி டாலர் அதிகரித்து 1,2074.2 கோடியாகவும், இந்த வார இறுதியில், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் கையிருப்பு நிலை எவ்வித மாற்றமுமின்றி 481.59 கோடி டாலராகவே நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.
India's forex reserves jumped by USD 9.063 billion to USD 697.121 billion for the week ended April 3, 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.