சிவகங்கை

10-ஆம் வகுப்புத் தோ்வு: செயின்ட் ஜோசப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

Din

மானாமதுரை, மே 10: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்புத் தோ்வு எழுதிய 124 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் எம்.சந்தோஷ் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றாா். இதேபோல இந்தப் பள்ளி மாணவி ஏ.கீா்த்தனா 491 மதிப்பெண்களும், கே. தாரணீஸ்வரி 490 மதிப்பெண்களும் பெற்றனா். இவா்களை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி.கிறிஸ்டிராஜ், முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா்கள் பிருந்தா, வள்ளிமயில், ஆசிரியைகள் பாராட்டினா்.

காதல் கதையில் மம்மூட்டி!

இன்சுலின் என்ற பெயரில் ஹோமியோபதி மருந்தா?

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு!

SCROLL FOR NEXT