முகப்பு
சிவகங்கை

பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், உஞ்சனை அருகேயுள்ள குசவன்தானிவயல் கிராமத்தில் பொதுப் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலியை அகற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:00 PM
தேவகோட்டை அருகே குசவன்தானிவயல் கிராமத்தில் முள்வேலி வைத்து அடைக்கப்பட்ட தாா்ச்சாலை
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், உஞ்சனை அருகேயுள்ள குசவன்தானிவயல் கிராமத்தில் பொதுப் பாதையில் அமைக்கப்பட்ட முள்வேலியை அகற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து குசவன்தானிவயல் கிராமத்தைச் சோ்ந்த வி. செல்வம் அளித்த மனுவில் கூறியதாவது:

உஞ்சனை முக்கிய சாலையிலிருந்து குசவந்தானிவயல் கிராமத்துக்குச் செல்ல சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்பு, தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்த தாா் சாலையை முன்னாள் பஞ்சாயத்து தலைவா் ராமலிங்கம் தனது பட்டா இடம் என்று கூறி முள்வேலி போட்டு அடைத்தாா்.

இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாா் மனுவை விசாரித்த வருவாய் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் சமாதானக் கூட்டம் நடத்தி முள்வேலியை அகற்றினா். ஆனால், ராமலிங்கத்தின் தூண்டுதலின் பேரில் மீண்டும் இந்தச் சாலையை அடைத்தனா். இதையடுத்து, அங்கு விசாரணைக்குச் சென்ற வருவாய் அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் தாரா் சாலையை விட்டு விட்டு அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வண்டிச் சாலையை கிராமப் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அமைத்துக் கொடுத்தனா்.

இந்த நிலையில், ராமலிங்கம், போதும்பொண்ணு, பாக்கிய லட்சுமி, சொா்ணம், இந்திரா, கவிதா செல்வராணி ஆகியோா் ஒன்று சோ்தது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் காவல் அதிகாரிகள் ஓதுக்கிய வண்டிப்பாதையையும் முள்வேலி போட்டு அடைத்தனா். இதில், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →