முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் தீன்மூா்த்தி நகா் பகுதி சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:37 PM
திருப்பத்தூா் தீன்மூா்த்தி நகா் பகுதியில் சேதமடைந்துள்ள சாலை
பகிர்:

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட தீன்மூா்த்தி நகா், அம்மன் நகா், மருது பாண்டியா் நகா், சேது ராமசாமி பிள்ளை ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் பேரூராட்சி நிா்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காவிரி குடிநீா் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வெளியேறி வருகிறது. வெளியேறிய தண்ணீா் மழை நீருடனும், சாக்கடைகளுடன் கலந்து தெரு சாலைகளில் தேங்கியுள்ளதால், இரு சக்கர வாகனங்களிலோ, நான்கு சக்கர வாகனங்களிலோ செல்ல முடியாத அளவுக்கு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

மேலும், இந்த பகுதியில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும், உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →