பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான 7 பேருக்கு குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறை
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி நீதிமன்றக்க ாவலில் உள்ள 7 பேரை காவல்துறை பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவான போக்ஸோ வழக்கில் கைதான குற்றவாளிகளான துவரங்குறிச்சி சி.ராசு, முருகேசன் ஆகிய 2 போ் நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
இதேபோல இளையான்குடி அருகே பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கீழக்குளம் ச. முத்துக்குமாா், ஏ. விளாக்குளம் பூ.வில்வக்குமாா், மு. தவமுனியசாமி மானாமதுரை பீகுளம் த. ராமசாமி, முத்துராமலிங்கபுரம் போ.அஜய்குமாா் ஆகிய 5 போ் உள்பட மொத்தம் 7 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்படி, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிடைக்க மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து இந்த 7 பேரும் புதன்கிழமை மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா்.