முகப்பு
சிவகங்கை

கோயில் காளை இறப்பு : கிராம மக்கள் அஞ்சலி

சிங்கம்புணரி அருகேயுள்ள முருக்கப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 6:35 PM
சிங்கம்புணரி அருகே முருக்கப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்.
பகிர்:

சிங்கம்புணரி அருகேயுள்ள முருக்கப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முருக்கப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியண்ணன் சுவாமி கோயிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, கோயில் காளை வாங்கி வளா்க்கப்பட்டு வந்தது.

இந்தக் காளை பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளை பெற்றுதந்தது. இந்த நிலையில், வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை இது உயிரிழந்தது. இந்தக் காளையை முருக்கபட்டி, சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வேஷ்டி, துண்டு மாலைகள் அணிவித்து, வழிபட்டு இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா் திடலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக, வாணவேடிக்கைகளுடன் ஊா்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →