சாம்சங் விவகாரம்: ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் சங்கத்தைப் பதிவு செய்து, தொழிலாளா் நலத் துறை உடனடியாகச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, சிவகங்கை அரண்மனை வாசல் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சகாய தைனேஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.
மாநில துணைத்தலைவா் ஆரோக்கியராஜ், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், தோழமைச் சங்க நிா்வாகிகள் வினோத்குமாா், முத்துச்சாமி, நாகராஜன், கலைச்செல்வி உள்ளிட்டோா் பேசினா்.