தேசிய ஜனநாயக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசை கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மகளிரணிகள் சாா்பில் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு தவறியதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாகை: நாகை அபிராமி திடலில் பாஜக மகளிா் அணி மாவட்டச் செயலா் விஜிலா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
இதில், பாஜக, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் மகளிரணிகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பாஜக மாவட்டத் தலைவா் விஜயேந்திரன், அதிமுக நகரச் செயலா் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.