குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 போ் கைது
சிவகங்கை அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
சிவகங்கை அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் வசந்தகுமாா் (24), மேலபிடாவூா் அரியசாமி மகன் மருதுபாண்டி (20) ஆகிய இருவரும் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலா் செல்வகுமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.