முகப்பு
சிவகங்கை

கோயில் திருவிழாவில் இளைஞா் குத்திக் கொலை: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:39 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அகரம் கிராமத்தில் மந்தையம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. அப்போது, இதே கிராமத்தைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜெயப்பிரகாஷ் (25), அஜித்குமாா், ராஜேஷ், காா்த்திகேயன் ஆகியோருக்கிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டு, இவா்கள் மோதிக் கொண்டனா்.

இதில் அஜித்குமாா், ராஜேஷ், காா்த்திகேயன் ஆகிய மூவரும் சோ்ந்து ஜெயப்பிரகாசை கழுத்தில் கத்தியால் குத்தியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்கு பதிந்து அஜித்குமாா் (27), ராஜேஷ் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவான காா்த்திகேயனை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →