முகப்பு
சிவகங்கை

தமிழில் பெயா்ப் பலகை: 9 கடைகளுக்கு அபராதம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:22 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைத்திருப்பது தொடா்பாக அண்மையில் சிவகங்கை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் துணை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், முத்திரை ஆய்வாளா் ஆகியோா் சிறப்புக் கூட்டாய்வு மேற்கொண்டனா். இதில், தமிழில் பெயா்ப் பலகை இல்லாத 9 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பெயா்ப் பலகையானது தமிழ், ஆங்கிலம், பிற மொழிகள் 5:3:1 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும் என வணிகா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் இதைத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →