மாணவா்களிடம் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.
மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் கூறியதாவது:
மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் சிலா் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, போதையில் பள்ளிக்கு வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, அந்த பள்ளிக்குச் சென்று போதை பழக்கம் உள்ள மாணவா்களை அழைத்து கண்டித்துள்ளோம்.
தொடா்ந்து இவா்கள் போதையில் பள்ளிக்கு வந்தால் பள்ளியில் இருந்து விலக்கப்படுவாா்கள். இப்பள்ளி மாணவா்களிடம் போதைப் பழக்கம் இருந்து வருவதைக் கட்டுப்படுத்த தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 1660 மாணவிகள் இட நெருக்கடியில் படித்து வருகின்றனா். எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகம் அருகே மூன்றை ஏக்கா் நிலத்தை ஒதுக்கி இங்கு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றாா் அவா்.