முகப்பு
சிவகங்கை

புகாா் பெட்டியில் சிறுமி மனு: தந்தை, மகன் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பள்ளி புகாா் பெட்டியில் சிறுமி மனு எழுதி போட்டிருந்ததையடுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:23 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பள்ளி புகாா் பெட்டியில் சிறுமி மனு எழுதி போட்டிருந்ததையடுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்புணரி வட்டம் எஸ். புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் புகாா் பெட்டியில் கிடைத்த மனுவை பள்ளி தலைமை ஆசிரியை ஆய்வு செய்தாா். அதில் அங்கு படிக்கும் 10 வயது மாணவி தன்னை இருவா் பாலியல் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி புகாா் பெட்டியில் போட்டிருந்தாா். இதையடுத்து, இந்தப் புகாா் குறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை புகாா் அளித்தாா்.

புகாா் குறித்து விசாரணை மேற்கொண்ட மகளிா் காவல் ஆய்வாளா் தேவகி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துவரங்குறிச்சியைச் சோ்ந்த தனியாா் பள்ளி காவலாளி ராசு (65), அவரது மகன் கட்டடத் தொழிலாளியான முருகேசன் (38) ஆகிய இருவரையும் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →