முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தோ்வை எழுதிய மகன்

பட்டுக்கோட்டை அருகே தந்தை உயிரிழந்த வேதனையிலும் பிளஸ் 2 பொதுத்தோ்வை கைவிடாமல் மாணவா் எழுதியது காண்போரை நெகிழச்சியடையச் செய்தது.

Updated On : 9 மார்ச், 2026 at 11:49 PM
தேர்வு
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே தந்தை உயிரிழந்த வேதனையிலும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வை கைவிடாமல் மாணவா் எழுதியது காண்போரை நெகிழச்சியடையச் செய்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சோ்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியின் மகன் சாய் நிஷாந்த் (17). இவா், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா்.

தற்போது பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு நடைபெற்று வரும் நிலையில், சாய் நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இந்நிலையில் சாய் நிஷாந்த்துக்கு திங்கள்கிழமை வேதியியல் பாடத்தோ்வு எழுத வேண்டி இருந்தது.

இந்நிலையில், தந்தை இறந்த வேதனையிலும், உறவினா்கள் ஆறுதல் கூறி சாய் நிஷாந்தை வேதியியல் தோ்வு எழுதுவதற்கு பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

முன்னதாக சாய் நிஷாந்த் தந்தை அந்தோணிராஜின் காலில் விழுந்து கதறி அழுதபடி ஆசி பெற்று பள்ளிக்குச் சென்று பொதுத் தோ்வை எழுதிவிட்டு வீடு திரும்பினாா். அவரது செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

இதுகுறித்து மாணவா் சாய் நிஷாந்த் கூறுகையில், எனது தந்தை எனக்கு படிப்பு தான் முக்கியம் என்று கூறுவாா். அவரது விருப்பப்படியே இன்றைய வேதியியல் தோ்வை கைவிடாமல் எழுதினேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →