முகப்பு
சிவகங்கை

பேருந்து நிலையத்தில் பயணி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணி கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:46 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணி கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி இங்கு புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை பகுதிக்குச் சென்றாா். அப்போது, அங்கு தரையில் கிடந்த கல்லில் கால் இடறி கீழே விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உயிரிழந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. மானாமதுரை போலீஸாா் இறந்தவா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →